அறிவியல் மற்றும் தொழில்சார் ஆராய்ச்சி பேரவை- கட்டமைப்புப் பொறியியல் ஆராய்ச்சி நடுவம் (அ.தொ.ஆ. பே-க.பொ.ஆ.ந) பல்வேறு வகையான கற்காரை (பண்சேர்மத்தால் செறிவூட்டப்பட்ட கற்காரை, தொழில்துறை துணை விளைபொருட்களைப் பயன்படுத்தி சீமைக்காரை / சிமிட்டி /பசைமண்ணுக்கு மாற்று பொருட்களினாலான கற்காரை, எஃகுகற்காரை(ஃபெரோ சிமெண்ட்), புவிபண்சேர்மக்கற்காரை போன்ற) உருவாக்கம் சார்ந்த ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டை மேற்கொண்டு வருகிறது. கணக்கீட்டு மற்றும் சோதனை மூலமாக ஆய்வுகளை மேற்கொள்ள இற்றை-நிலை-நுட்ப வசதிகளும், சிறப்புத் திறனும் கொண்டு படிப்படியாக உருவாக்கிய மூலப்பொருட்களில் வெவ்வேறு செயல்களினால் (எ.டு., சுற்றுச்சுழல் மற்றும் இயந்தரங்களால்) ஏற்படும் விளைவுகளையும் கட்டமைப்பு மற்றும் அவற்றின் கூறுகளின் செயல்திறனை புரிந்து கொள்ளவதற்கும் இவ்வாய்வகம் முனைகிறது.
பன் அளவீடுகள் படிமமாக்கல், மீநுண்ப் பொறியியல், உகப்பாக்க நுட்பங்கள், பயன்பாடு பொறுத்து தரமாக்கப்பட்ட மூலப்பொருட்கள் முதலியவற்றைக் கொண்டு புது மற்றும் புத்தாக்க மூலப்பொருட்களை வடிவமைப்பதில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடுசார் வல்லமையை உண்டாக்க பெரிய வாய்ப்புள்ளது. மூலப்பொருட்கள் மற்றும் கட்டமைப்புகள் / கூறுகளின் பண்புகள் / விளைவுகளைப் புரிந்து கொள்ள பல்வேறு நீள அளவீடுகளில் (மீநுண்-நுண்-இடை முதல் பேரளவு வரை) ஆய்வுகளை மேற்கொள்வது முக்கியம். துறைகளுக்கிடையேயான களத்தில் (பொறியியல்சார் அறிவியல்) பணியாற்றுவதற்கும் பொறியியல் தொழில்நுட்பத்திற்கு பங்களிப்பதற்கும் ஒரு தனித்துவமான வாய்ப்பு உள்ளது. செயல்முறை- கட்டமைப்பு- பண்பு - செயல்திறன் ஆகிய சிறப்பியல்புகளை பயன்படுத்தி பல்வேறு அளவீடுகளில் விளைவுகளை இணைத்து மூலப்பொருட்களை உருவாக்க இது உதவும். இது அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் பொறியியலில் அண்மையில் உருவான முன்னேற்றங்களை ஒருங்கிணைக்க வாய்ப்புள்ள, உலகளாவிய தற்போதைய ஆராய்ச்சி புலன்களில் ஒன்றாகும். மேலும்
எடை குறைந்த அதிக வலிமையான மூலப்பொருளான வலுவூட்டப்பட்ட நெகிழிகள் போன்ற முதன்மை கட்டமைப்பு மூலப் பொருட்கள், பசுமை கட்டுமானத்திற்காக உருவாக்கப்பட்ட மணல் போன்ற மாற்றுப் பொருட்கள், மற்றும், முன்புனைந்து அமைக்கப்பட்ட மற்றும் முன் வடிவமைக்கப்பட்ட கட்டமைப்புகள் / கூறுகள் ஆகியவை மேலும் ஆய்வு செய்வதற்கான வாய்ப்புள்ள புலமாகும். நிலைப்புத்திறம் அடிப்படையிலான பயனுறு வடிவமைப்பிற்கான வழிமுறைகளை உருவாக்குவதும், குறுகிய மற்றும் நீண்ட கால பண்புகள், பின்னிடைவு (ஹிஸ்டெரெசிஸ்) நடத்தை மற்றும் மாறுபட்ட வெப்பநிலை மற்றும் சூழ்நிலைளின் கீழ் உருவாக்கப்படும் மூலப்பொருட்களின் செயல்திறனை மதிப்பீடு செய்வதும் அவசியம். இது சர்வதேச கூட்டாய்விற்கு ஏராளமான வாய்ப்புகளை ஏற்படுத்தும்.
ஐ. எஸ். ஓ. 15392 இல் சுட்டிக்காட்டப்பட்டபடி, நீடித்த மூலப் பொருட்கள் உருவாக்கம் என்பது உலகளாவிய சவால் என்றாலும், கட்டிட கட்டுமானத்தில் நீடித்தத்தன்மையை அடைவதற்கான உத்திகள் இடஞ் சார்ந்து வேறுபடுகின்றன. நீடித்த உள்கட்டமைப்புகளை அடைய முழுமையான வடிவமைப்பு மற்றும் பராமரிப்பு அணுகுமுறைகளை உருவாக்குவதற்கு ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு சார் திட்டங்கள் இருக்க வேண்டியதன் அவசியத்தை இது குறிக்கிறது. கட்டுமானப் பொருட்களின் மறுசுழற்சி மற்றும் பயனற்ற கட்டுமானப் பொருட்களைப் பயன்படுத்துதல் போன்ற துறைகளில் தொடக்கத்திலிருந்து கருத்துருவாக்கத்தை அடைய ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு பணிகள் குறிப்பாக மேற்கொள்ளப்பட வேண்டும்.
அமைப்பின் ஆயுள் சுழற்சி பகுப்பாய்வைச் செய்யாமல், நீடித்தத்தன்மையின் தகுதிகூற்றுக்கள் ஆதாரமற்றவை. மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட உள்கட்டமைப்பு பயன்பாட்டின் நீடித்தத்தன்மை குறித்த பின்னூட்ட தகவல்கள் மேலும் மேம்படுத்த உதவுகிறது. இதற்கு மூலப்பொருள் வடிவமைப்பு, கட்டமைப்பு பயன்பாடு உள்ளிட்ட கட்டமைப்பின் உருவாக்கம் தேவைப்படுகிறது. மேலும், நீடித்த கட்டமைப்புகளை பெற, நீடிப்புத்திறன் தேவைகளை நிறைவு செய்ய நீடிப்புத்திறன் குறியீட்டைத் பண்பேற்றம் தன்மைப்படுத்தல், மூலப்பொருட்களின் தேர்வு மற்றும் வடிவமைப்பு, செயல்திறன் அடிப்படையிலான உயர்நீட்டிப்பு வடிவமைப்பு ஆகிய புலங்களில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு புலாய்வுகளை மேற்கொள்ள வேண்டும்.