logo

சி. எஸ். ஐ. ஆர். - எஸ். இ. ஆர். சி. பற்றி

சி. எஸ். ஐ. ஆர்.  - எஸ். இ. ஆர். சி. பற்றி

சென்னையில் அமைந்துள்ள சி. எஸ். ஐ. ஆர். - கட்டமைப்பு பொறியியல் ஆராய்ச்சி நடுவம் (க. பொ. ஆ. ந.),இந்தியாவின் அறிவியல் மற்றும் தொழில்சார் துறை ஆராய்ச்சி பேரவையின் (அ. தொ. ஆ. பே.) கீழ் உள்ள தேசிய ஆய்வகங்களில் ஒன்றாகும். அ. தொ. ஆ. பே. - க. பொ. ஆ. ந. கட்டமைப்புகள் மற்றும் கட்டமைப்பு கூறுகளின் பகுப்பாய்வு, வடிவமைப்பு மற்றும் சோதனைக்கு மிகச்சிறந்த வசதிகள் மற்றும் சிறப்பு அறிவுத்திறத்தை உருவாக்கியுள்ளது. இந்நடுவத்தின் சேவைகள் மத்திய மற்றும் மாநில அரசுகள், மற்றும் பொது மற்றும் தனியார் துறை நிறுவனங்களால் அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன. இந்நடுவதின் விஞ்ஞானிகள் பல தேசிய மற்றும் சர்வதேச குழுக்களில் பணியாற்றுகின்றனர். மேலும் இந்த நடுவம், கட்டமைப்பு பொறியியல் துறையில் ஒரு முன்னணி ஆராய்ச்சி நிறுவனமாக தேசிய மற்றும் சர்வதேச மட்டங்களில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

எமது ஆராய்ச்சி நடுவத்தின் பட்டயம்

அ. தொ. ஆ. பே. - க. பொ. ஆ. ந. கட்டமைப்பு பொறியியலின் மிக அண்மை கால அறிவுக்கான தீர்வகமாக செயல்படுகிறது மற்றும் அனைத்து வகையான கட்டமைப்புகளின் வடிவமைப்பு மற்றும் கட்டுமானத்தைப் பற்றிய அறிவை உருவாக்குகிறது. இந்நடுவம் மறுசீரமைப்பு உள்ளிட்ட கட்டமைப்புகளின் வடிவமைப்பு மற்றும் கட்டுமானம் ஆகிய கட்டமைப்பு பொறியியலின் அனைத்து கூறுகளிலும் பயன்பாடு சார்ந்த ஆராய்ச்சியை மேற்கொள்கிறது. இந்நடுவம் பொது மற்றும் தனியார் துறைகளில் உள்ள நிறுவனங்களுக்கு பலவிதமான கட்டமைப்பு வடிவமைப்புகளை உருவாக்குவதற்கான மெய்ப்பு சரிபார்த்து சான்று அளித்தல் உள்ளிட்ட வடிவமைப்பு ஆலோசனை சேவைகளை வழங்குகிறது. இந்நடுவம், பொறியாளர்களின் நன்மைக்காக பகுப்பாய்வு, வடிவமைப்பு மற்றும் கட்டுமானம் ஆகியவற்றின் அண்மையில் ஏற்பட்ட முன்னேற்றங்களை அறிந்துகொள்ள கட்டமைப்பு பொறியியல் குறித்த சிறப்பு பயிற்சி வகுப்புகளை நடத்திவருகிறது.

எமது ஆராய்ச்சி நடுவத்தின் தொலைநோக்கு பார்வை

வளர்முக மற்றும் அதிநவீன புலம் சார்ந்த ஆராய்ச்சியில் சிறந்து விளங்குவதன் மூலம் கட்டமைப்பு பொறியியலில் உலக அளவில் முன்னோடியாக திகழ்வதொடு, சமூகம் மற்றும் தொழில்துறையின் நலனுக்காக வெவ்வேறு புலங்களுக்கு இடையேயும், புலம்கடந்தும் புத்தாக்க அணுகுமுறைகளை ஏற்று போட்டிக்கேற்ற தொழில்நுட்பங்களை உருவாக்குவதும் ஆகும்.

எமது ஆராய்ச்சி நடுவத்தின் செயல் இலக்கு

  • கட்டமைப்பு பொறியியலின் வளர்முக / அதிநவீன புலம் சார்ந்த ஆராய்ச்சியைத் தொடரவும் சிறந்து விளங்கவும், மற்றும் தனித்துவமுடைய புலங்களை உருவாக்குதல்.
  • வெவ்வேறு அளவுகள், வடிவங்கள், வடிவமைப்புகள் மற்றும் பயன்பாட்டின் நோக்கம் ஆகியவற்றைக் கொண்ட கட்டமைப்புகளின் புதிய சவால்களைத் தீர்வுளிப்பதற்கு வளமிக்க நடுவமாக தொழில்துறைக்கு விருப்பமான தேர்வாகத் திகழ்வது.
  • சமூகத் தேவைகளை நிவர்த்தி செய்யும் நீடித்த தொழில்நுட்பங்களை உருவாக்கி அளித்தல்.
  • பேரழிவுக்கு முந்தைய மற்றும் பிந்தைய தேவைகளுக்கு கட்டமைப்பு பொறியியல் சார்ந்த தீர்வுகளை வழங்குவதற்கான விருப்பமான அறிவு நடுவமாக திகழ்வது.

எமது ஆராய்ச்சி நடுவத்தின் நோக்கம்

  • அறிவு உருவாக்கம் மற்றும் பரப்புதல்.
  • தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் பரிமாற்றம்.
  • புத்தாக்க செயல்முறைகள் மற்றும் தயாரான பொருள்களின் மேம்பாடு.
  • தொழி ல்துறைக்கு உயர்நிலை அறிவுசார் சேவை.
  • சமூகம் மற்றும் பாதுகாப்பு துறைக்கு சேவைகள்.
 

வணிக விவரங்களுக்கு

அனைத்து வணிக வினவல்களைஅனுப்ப வேண்டிய முகவரி:
இயக்குனர்
சி.எஸ்.ஐ.ஆர்- கட்டமைப்பு பொறியியல் ஆராய்ச்சி நடுவம்
சென்னை 600113
மின்னஞ்சல்: director[at]serc[dot]res[dot]in

--------------------- அல்லது ----------------------

தலைவர், தொஅமேமேபி (பி.கே.எம்.டி.)
சி.எஸ்.ஐ.ஆர்- கட்டமைப்பு பொறியியல் ஆராய்ச்சி நடுவம்
சென்னை 600 113
மின்னஞ்சல்: bkmd[at]serc[dot]res[dot]in