CSIR-SERC logo

சிறப்பு மற்றும் பல் செயல்பாட்டுக் கட்டமைப்புகள்

சிறப்பு கூட்டமைப்புகள், உயிர்சேதம் மற்றும் பொருளாதார இழப்புகளை கருத்தில் கொண்டு தனித்த வடிவம், நீட்சி கொண்டு அமைக்கப்பட்டது. இடை ஆதாரமற்ற நீண்ட தொங்கு மற்றும் கம்பி வட ஆதார பாலங்கள், உயர் மின் கோபுரங்கள், குளிர்விப்பு உயர் கோபுரங்கள், கப்பல் கட்டமைப்புகள், வான்வெளி கட்டமைப்புகள், கண்டங்களுக்கிடையேயான நிலத்தடி குழாய் தொடர்கள், சுரங்கப்பாதைகள், கடல் சார் கட்டமைப்புகள், கரை அன்னம் மேடைகள் மற்றும் அது சார்ந்த குழாய் கூறுகள், இழுவிசை தூண் மேடைகள், அணு மற்றும் அனல் மின் கட்டமைப்புகள், உயர்ந்த காற்றாலைகள், பல்பயன்பாட்டு உயர் கட்டிடங்கள், செயல்திறன் மேம்படுத்தப்பட்ட பொருட்களால் ஆன கட்டமைப்புகள், மற்றும் விண்வெளிக் கட்டமைப்புகள் போன்றவை சிறப்பு கட்டமைப்புகளில் அடங்கும். அறிவியல் மற்றும் தொழில்சார் ஆராய்ச்சி பேரவை - கட்டமைப்பு பொறியியல் ஆராய்ச்சி நடுவமானது மேற்கண்ட கட்டமைப்புகளின் விரிவான ஆராய்ச்சி மற்றும் திறன் வடிவமைப் பணிகளில் நெடுங்காலமாக ஈடுபட்டு வருகின்றது. குறிப்பாக கப்பல்கூடு பகுப்பாய்வு, தகவல்தொடர்பு மற்றும் உயர்மின் கோபுரங்களின் பகுப்பாய்வு, வடிவமைப்பு மற்றும் சோதனை, ஆழ்கடல் கட்டமைப்பு மற்றும் அணுமின் நிலைய குழாய் கூறுகளில் ஏற்படும் அயர்வு மற்றும் தகர்வு, இயங்கு முறை, குளிர்விப்பு கோபுரங்களின் பகுப்பாய்வு, மற்றும் வடிவமைப்பு போன்றவற்றிலும் செயல்படுகிறது. இனி வரும் காலங்களில், சிறப்பு கட்டமைப்புகள் எதிர் கொள்ளும் பகுப்பாய்வு, மற்றும் வடிவமைப்பு உள்ளிட்ட சவால்களை எதிர்கொள்ள திறமைகளை வளர்த்துக் கொள்ளும். மேலும் இந்நடுவம் பல்செயல்திறன் கொண்ட சிறப்பு கட்டமைப்புகள் சார்ந்த ஆய்வுகள் மற்றும் மேம்பாட்டில் வல்லமையை பெருக்கி ஆற்றல் அறுவடை, கனிம சுவடுகளை குறைத்தல் போன்ற கட்டுமானங்களின் நீடித்த பயன்பாட்டிற்கு புதிய பரிமாணத்தை ஏற்படுத்த முனையும்.