எங்களை பற்றி
கோட்பாட்டு விசையியல் என்பது விசைகளின் இயக்கத்தால் இயற்கையிலுள்ள அமைப்புகளின் இயங்குமுறையை விவரிக்கும் அறிவியலாகும். மறுபுறம், விரைவாக வளர்ந்து வரும் கணக்கீட்டு விசையியல் துறை என்பது விசையியல் கொள்கைகளால் நெறிப்படுத்திய நிகழ்வுகளைப் அறிய கணக்கீட்டு முறைகளைப் பயன்படுத்துகின்றது.
அறிவியல் மற்றும் தொழில்துறை சார் ஆராய்ச்சி பேரவை-கட்டமைப்பு பொறியியல் ஆராய்ச்சி நடுவத்தில் (அ.தொ.ஆ. பே. – க.பொ.ஆ. ந. ) உள்ள கோட்பாட்டு மற்றும் கணக்கீட்டு விசையியல் ஆய்வகத்தில் (கோ.க.இ.ஆ,) பணிபுரியும் விஞ்ஞானிகள் ஒன்றிணைந்து உயர் தொழில்நுட்ப சார் பன்முக சிக்கல்களுக்கு கோட்பாட்டு மற்றும் கணக்கீட்டு இயக்கவியலைப் பயன்படுத்தி நம்பகமான தீர்வுகளை வழங்குகின்றனர். கோட்பாட்டு மற்றும் கணக்கீட்டு இயக்கவியலைப் பயன்படுத்தி இயற்பியல் / இயற்கை நிகழ்வுகள் மற்றும் பொறியியல் அமைப்புகளை வகைப்படுத்தல், முன்கணித்தல் மற்றும் ஒப்புருவாக்கத்தில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.
இவ்வாய்வகத்தில் கிஇழக்கண்ட துறைகள் உள்ளிட்ட ஆய்வுகள் நடைபெறுகின்றன:
- கட்டமைப்புகளின் அதிர்வு தாக்குதலை பகுப்பாய்வு, கணக்கீட்டு மற்றும் கள சோதனைகள் மூலம் ஆராய்தல்
- கற்காரை இயங்கு முறையை கணக்கீட்டு உருப்படிவம் /மாதிரிகள் மூலம் ஆராய்தல்
- கட்டமைப்புகள் / கட்டமைப்பு கூறுகளின் தளர்வு மற்றும் தகர்வுவின் மேம்பட்ட பகுப்பாய்வு
- பொறியியல் சார் முடிவெடுப்பதற்கான சீரற்ற உருப்படிவம் /மாதிரிகளின் பயன்பாடு
- நெய்பொருள் வலுவூட்டப்பட்ட கற்காரை தொழில்நுட்பம் மற்றும் தயாரிப்புகள்
- பின் உருவாக்கம் மற்றும் மேம்பாடு
- கட்டமைப்புகள் இடர் ஒவ்வு வடிவமைப்பு / அமைப்புக் கூறுகள்
- உழை திறம் அடிப்படையில் திண்காரை கட்டமைப்பு கூறுகளின் வடிவமைப்பு