
ISSN 0970-0137
Current Issue
October – November 2022 Issue, Vol. 49 No. 4
முன்னுரை
சென்னையில் அமைந்திருக்கும் சிஎஸ்ஐஆர்-கட்டமைப்பு பொறியியல் ஆராய்ச்சி நடுவம், கட்டமைப்பு பொறியியல் இதழை 1973 ஆம் ஆண்டில் இருந்து வெளியிட்டு வருகிறது. இது 2014 வரை காலாண்டு இதழாக இருந்தது. பின்னர் இது தேசிய மற்றும் சர்வதேச அளவில் பங்குதாரர்களிடம் பெறப்பட்ட மிகப்பெரிய வரவேற்பில் அடிப்படையில் தற்பொழுது இரு மாதங்களுக்கு ஒருமுறை வெளியிடப்படுகிறது.
பொதுவான செய்தி
கட்டமைப்பு பொறியியல் இதழ், கட்டமைப்பு பொறியியல் / இயக்கவியல் குறித்த திறந்த மன்றமாகும். இந்தத் துறை தொடர்பான ஆய்வுக்கட்டுரைகள் கட்டமைப்பு பொறியியல் இதழில் வெளியிடுவதற்கு வரவேற்கப்படுகின்றன. கட்டுரை ஆசிரியர்கள் தங்க ளது கட்டுரைகள் மேம்பட்ட அறிவார்ந்த மதிப்பைக் கொண்டிருப்பதை யும் ஆய்வாளர்கள் மற்றும் களத்திலுள்ள பொறியாளர்கள் ஆகியோருக்கு ஈடுபாடு / பயன் உடையதையும் மற்றும் கட்டமைப்புப் பொறியியல் / விசையியல் சார்ந்த அறிவை மேம்படுத்தக்கூடிய மெய்யான பங்களிப்பு உள்ளதையும் / உறுதிப்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ஆய்வுக்கட்டுரைகள் கடந்தகால நடைமுறையின் அசல் மதிப்பாய்வாகவோ, கட்டமைப்பு பொறியியல் செயல்பாட்டின் புதிய துறை ஆய்வாகவோ அல்லது ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகளின் முடிவுகள் குறித்த அறிக்கையாகவோ இருக்கலாம். ஆய்வுக்கட்டுரைகள் திட்டமிடல், பகுப்பாய்வு, சோதனைகள் மற்றும் ஆய்வுமுறை (ஆய்வகத்தில் அல்லது களத்தில்), வடிவமைப்பு, கட்டுமானம் மற்றும் பராமரிப்பு, நலன் கண்காணிப்பு, கட்டமைப்பு கூறுகள் / அமைப்பின் பழுது / சீரமைப்பு ஆகியவற்றிற்கு பங்களிக்கும் ஒரு சிந்தனையைத் தூண்டும் ஆய்வாக இருக்கலாம். வேறு இதழ் களில் வெளியிடப்படாத அல்லது வெளியிடுவதற்கு அனுப்பப்படாத ஆய்வுக்கட்டுரைகள் மட்டுமே இந்த இதழில் வெளியிடுவதற்காக பரிசீலிக்கப்படும். ஆய்வுக்கட்டுரைகளில் விவாதிக்கப்படும் விஷயம் பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மையை அங்கமாகக் கொண்ட திட்டத்தின் குறிக்கோள்களை அடைய புதுமையான / புத்தாக்கத் திட்டங்களை மேற்கொண்ட பொறியாளர்களின் கள அனுபவமாக இருக்கலாம்.
கட்டமைப்பு பொறியியல் இதழ் பின்வரும் தரவுத்தளங்களில் குறியிடப்பட்டுள்ளது. ஸ்கோபஸ், கல்வித் தேடல் பிரீமியர், ஏரோஸ்பேஸ் தரவுத்தளம், சிவில் இன்ஜினியரிங் சுருக்கங்கள், காம்பென்டெக்ஸ், மெட்டாடெக்ஸ், http://miar.ub.edu/issn/0970-0137.