logo

கற்காரையின் மேம்பட்ட சோதனை மற்றும் மதிப்பீட்டு ஆய்வகம்

எங்களைப்பற்றி

அறிவியல் மற்றும் தொழில்சார் ஆராய்ச்சி பேரவை-கட்டமைப்பு பொறியியல் ஆராய்ச்சி நடுவத்தின் (அ.தொ.ஆ.பே-க.பொ.ஆ.ந). ஆரம்பகாலத்தில் நிறுவப்பட்ட முதல் ஆய்வகம் கற்காரையின் மேம்பட்ட சோதனை மற்றும் மதிப்பீட்டு ஆய்வகம் (க.மே. சோ.ம.ஆ) ஆகும். இவ்வாய்வாகம், முன்பு கற்காரை பொறியியல் ஆய்வகம் என்று அழைக்கப்பட்டது. இந்த ஆய்வகம் சேதமுறா மற்றும் கற்காரை கட்டமைப்புகளின் நீடித்த பயன்பாட்டிற்கான ஆய்வுகள் மற்றும் தொழில்சார் துறைகளின் சேவையில் ஈடுபட்டுள்ளது. இங்கே, மேள்சுத்தி, மீயொலித்திசை வேகத்துடிப்பு, கற்காரை உருளை மாதிரி சோதனை மற்றும் அமுக்கவலிமை மதிப்பீட்டு சோதனை போன்ற உத்திகளை பயன்படுத்தி மதிப்பீடுகள் செய்யப்படுகின்றன. கட்டமைப்பின் நீடித்த பண்புகளை குளோரைடு சோதனை, கரிமலவாயு ஊடுருவு சோதனை மற்றும் மின்தடை சோதனைகள் மூலம் மதிப்பிடப்படுகிறது. இதுமட்டுமின்றி, தாக்க-எதிரொலி, மீயொலியத்துடிப்பு எதிரொலி மற்றும் மின்காந்தஇலை ஊடுருவி போன்ற மேம்பட்ட சேதமுறா சோதனை முறைகளை பயன்படுத்தி மேம்பட்ட தரசோதனைகள் செய்யப்படுகிறது.

இந்த ஆய்வகத்தின் மேற்கூரையின் சிறப்பு இருபரிமாண வளைவு வடிவ ஓட்டமைவிலான அமைப்பிலானது. இது அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் மிக பரவலாக பயன்படுத்தப்படும் பலகை அமைப்பை போன்றது. இந்த குழிவப்பஓடு அமைப்பானது, மிகவும் விறைப்பான மற்றும் அதிகப்படியான பாரத்தை சுமக்கவல்லது. இந்த ஆய்வகமானது, கட்டுமானப்பொருட்கள் உருவாக்கம் மற்றும் தொழில்நுட்பங்களின் அறுபதுகளிலிருந்து மேம்பாட்டுப்பணிகளை மேற்கொண்டு வருகிறது. குடியிருப்பு, நிறுவன மற்றும் தொழில்துறை கட்டிடங்களுக்கான பயன்திறன் மிக்க கற்காரை தயாரிப்புகள் மற்றும் கட்டுமானத்தொழில் நுட்பங்களை உருவாக்குவதில் இந்த ஆய்வகம் மிகச்சிறந்து விளங்கிக்கொண்டிருக்கிறது. இந்த ஆராய்ச்சி மையமானது, கற்காரையின் மேம்பட்ட சோதனை மற்றும் மதிப்பீட்டு ஆய்வகம் (க. மே. சோ.ம.ஆ) 1966-67 முதல், டாடா இரும்பு & எஃகு, நிறுவத்துடன் இணைந்து மிக சக்தி வாய்ந்த முறுக்கு கம்பிகளை உருவாக்கி, கற்காரைக்கட்டுமான முறைகளில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது.

கற்காரையின் மேம்பட்ட சோதனை மற்றும் மதிப்பீட்டு ஆய்வகம் (க.மே.சோ.ம.ஆ)

Head, Advanced Concrete Testing & Evaluation Laboratory

முனைவர் ஶ்ரீநிவாசன் பா

முனைவர் ஶ்ரீநிவாசன் பா

தலைமை விஞ்ஞானி

  • Tel: 22549170
  • Email: sriniv(at)serc(dot)res(dot)in