logo

கட்டமைப்பு நலன் கண்காணிப்பு மற்றும் ஆயுள் நீட்டிப்பு

கட்டமைப்பு நலன் கண்காணிப்பு மற்றும் ஆயுள் நீட்டிப்பு புலமானது அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி பேரவை - கட்டமைப்பு பொறியியல் ஆராய்ச்சி நடுவத்தின் (அ.தொ.ஆ. பே.-க.பொ.ஆ. ந. ) மிக முக்கியமான ஆராய்ச்சி புலங்களில் ஒன்றாகும். கடந்த முப்பது வருடங்களாக இந்நடுவம் இத்துறையில் சிறப்பு அறிவுத்திறத்தை வளர்த்து வருகிறதுஅணுக்கரு கதிர்வீச்சு பாதுகாப்பு கட்டமைப்புகள், பாலங்கள் முதலான பல் வகை கட்டமைப்புகளின் நலனைக் கண்காணிக்கவும், அவற்றின் நிலையை மதிப்பீடு செய்யவும் மற்றும் அவற்றின் ஆயுளை நீட்டிக்க தீர்வு காணவும் பல தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் இந்நடுவத்தை அணுகியுள்ளன.அதிர்வுறும் கம்பி திரிபு அளவி , கண்ணாடி இழை திரிபு அளவி, வளைய துளையிடுதல், தட்டை அழுத்த உணர்வி, அதிர்வு கணிப்பிடல் மற்றும் பல தனித்துவமான இற்றை-நிலை-நுட்பங்களை பயன்படுத்தி பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டு, வெளிப்புற முன்தகைவூட்டிய மற்றும் மேலுறையிடுதல் மூலம் கட்டமைப்புகளின் ஆயுளை நீட்டிக்க இந்நடுவம் செயல்பட்டு வருகின்றது

செவிப்புலங்கடந்த / கேளாஒலிசார் துடிப்பு எதிரொலி, தாக்க எதிரொலி மற்றும் ஊடுருவக்கூடிய தொலைக்கண்டுணர்வி / கதிரலைகள் கொண்டு சேதமுறா சோதனை மூலம் கற்காரை கட்டமைப்புகளின் நிலையை மதிப்பிட்டுஅறியும் வல்லமையை வளர்த்துள்ளது.எனினும், கட்டமைப்புகளின் நிகழ்-நேர நலனைக் கண்காணிக்க, மேம்படுத்தப்பட்ட மற்றும் நம்பத்தக்க நெறிமுறை களை உருவாக்குவதற்கு ஆழ்ந்த / ஆழ்ந்த ஆராய்ச்சிகள் மேற்கொள்ள மாபெரும் வாய்ப்புகள் உள்ளது.மேலும், கட்டமைப்புகளை நுண்ணறிவு மற்றும் வினைத்திறம் மிக்கதாக்குவதற்கு புதிய உணரிகள் மற்றும் அதை சார்ந்த கண்காணிப்பு உத்திகளைஉருவாக்குவதற்கான வாய்ப்புகள் அதிகமுள்ளது.பயன்பாட்டிலுள்ள கட்டமைப்புகளின் ஆய்வு மற்றும் பழுதுபார்ப்பு /சீரமைப்பிற்கு நிகழ்நிலை கண்காணிப்பின் மூலம் பெறப்பட்ட தரவுகளைக் கொண்டு தொழில்நுட்பதீர்வுகாணுவதற்கு தேவையான ஆராய்ச்சிகளும் மேற்கொள்ளப்பட வேண்டும்.இதற்கு புதிய உணரிகள், தொலைத்தொடர்பு, எண்ணிலக்க குறிகை செயல்முறை, எண்ணிலக்க உருவ அலசல் செயலாக்கம், தரவு மேலாண்மை, அமைப்பறிதல் ல், தகவல் தொழில்நுட்பம், மென்பொருள் கணக்கீடு, குவைய விசையியல் போன்ற இயற்பியல் சார்ந்த முறைகள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு பல துறைகள் கொண்ட பல்புலஒருங்கமைவு அணுகுமுறை தேவைப்படுகிறது.

மேம்படுத்தப்பட்ட எண்ணிலக்க உருவ அலசல் செயலாக்கம்தொழில்நுட்பங்கள் போக்குவரத்து சுமையை கணக்கிட்டு பயன்பாட்டிலுள்ள போக்குவரத்து கட்டமைப்புகளின் திறனை அறிய உதவுகின்றன.கட்டமைப்பு நலன் கண்காணிப்பு திட்டமுறைகள், நகர்ப்புற உள்கட்டமைப்புகளில் சுற்றுச்சுழல் மாறுபாட்டால் ஏற்படும் விளைவுகளை அறிய உதவுகிறது.இத்துறையில் பெயர்வு ஆராய்ச்சிகள் கொண்டு புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் தயாரிப்புகள் உருவாக்குவதற்கு கணிசமான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.புல ஆய்வுகள் மேகொள்வதிலும், தொலைநிலை நலன் கண்காணிப்பு திட்டமுறைகள் உருவாக்குவதிலும், இந்நடுவத்தின் விஞ்ஞானிகள் மகத்தான அனுபவம் பெற்றதால், அ.தொ.ஆ. பே.-க.பொ.ஆ.ந., இத்துறையில் சிறந்த களஅனுபவம் கொண்ட நடுவமாக விளங்குகிறது.நம் நாட்டின் நகரமயமாக்கலினால் ஏற்படும் உள்கட்டமைப்பு வளர்ச்சி மற்றும் மிடுக்கான நகரங்களை உருவாக்கல், புனரமைப்பு மற்றும் நகரமயமாக்கும் அடல் குறிக்கோள் போன்ற பல இந்திய அரசின் திட்டங்கள் இத்துறையில் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட வேண்டியதின் அவசியத்தை பறைசாற்றுகிறது.