logo

சிறப்பு மற்றும் பல்செயல்திறன் கட்டமைப்புகள் ஆய்வகம்

எங்களைப்பற்றி

அறிவியல் மற்றும் தொழில்சார் ஆராய்ச்சி பேரவை - கட்டமைப்பு பொறியியல் ஆராய்ச்சி நடுவத்தின் (அ.தொ.ஆ.ச-க.பொ.ஆ.ந) சிறப்பு மற்றும் பல்செயல்திறன் கட்டமைப்புகள் ஆய்வகமானது 35.6 மீ நீளம் மற்றும் 12.6 மீ அகலம் கொண்ட தரைப்பரப்பளவும், 15.38 மீ உயரமும் கொண்ட ஆய்வகமாகும். இதன் வலிமையான சோதனை தளத்தில், ஒவ்வொரு 0.5மீ / 1.0மீ இடைவெளியில் பற்று துளைகளை கொண்டுள்ளது. இதன் 2.25மீ உயரமுள்ள நிலஅறையுடன் கூடிய சோதனை தளம், தனிக்கடைக்காலுடன் வலுவூட்டப்பட்ட கற்கரையால் கட்டப்பட்ட இரட்டைஅறை கொண்ட நிலஅறையை உபயோகிக்கும் வகையில் கட்டப்பட்டுள்ளது. ஆய்வகத்தின் மேற்கூரையின் சிறப்பானது, 12.6மீ x 12மீ அளவுடன் செங்கல்லான இருபரிமாண வளைவு கூடு கொண்டு, ஒரு மீட்டர் இடைவெளியுடன் கூடிய வலுவூட்டப்பட்ட கற்காரை உத்திர சட்டகத்தை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சோதனைக்கூடத்தில், மிகச் சிறப்பு வாய்ந்த முக்கிய சோதனை வசதிகளான, இரண்டு 250 கி.நி மற்றும் 500 கி.நி திறன்கொண்ட பின்னிட்ட நீர்மவிசை உந்திகள் இயக்ககட்டுப்பாடு, 2000 கி.நி திறன் கொண்ட நீர்மவிசைஉருளைஉந்து, 10 டன் எடை தாங்கும் மேல்நிலை மின் சுமைத்தூக்கி, விசையறி மின்அளவி, 2000 கி.நி திறன் கொண்ட வினைத்தாங்கு சட்டகம், 3000 கி.நி திறன் அமுக்கவிசை இயந்திரம், 25 கி.நி உயருணர்திறன் கொண்ட பொதுசோதனை இயந்திரம், எதிர்வினைநிறை விசையியல் மின்உலுக்கிகள், தரவுபதிவு மின்கருவி, திரிபு, நிலைமாற்ற மற்றும் அதிர்வு உணரிகள் போன்ற பற்பல பயன்பாட்டு இயந்திரங்கள் மற்றும் கருவிகள் உள்ளன.

அறிவியல் மற்றும் தொழில்சார் ஆராய்ச்சி பேரவை- கட்டமைப்பு பொறியியல் ஆராய்ச்சி நடுவத்தின் (அ.தொ.ஆ. பே-க.பொ.ஆ.ந) மீநுண்-உள்கட்டமைப்பு பொறியியல் துறையானது, பொறியியல் அறிவியலின் பல்புலதளத்தில் பணியாற்றுவதற்கும் மற்றும் பொறியியல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சிக்கான பங்களிப்பாற்றும் தனித்திறன் மிக்க துறையாகும். இக்குழு, கட்டமைப்பு பொருட்கள் மற்றும் கட்டமைப்புகளின் இயக்கவியலில் முழுகவனத்துடன் முனைப்புடன் பணியாற்றுகிறது. இந்த ஆய்வுக்குழுவின் ஆராய்ச்சியானது, பொருட்கள் மற்றும் கட்டமைப்புகள் / கூறுகளின் பண்புகள் / பதில்வினைகளைப் புரிந்துகொள்வதற்காக அவற்றின் பல்வேறு அளவுநிலைகளில் பணிபுரிகிறது. இதன்மூலம், செயல்முறை- கட்டமைப்பு- பண்புகள்- செயல்திறன் சிறப்பியல்பு மூலம் பல்வேறு அளவுகளில் பண்பேற்ற பொருட்களை உருவாக்க உதவும்.

இந்த ஆய்வின் கவனம் முழுவதும் வழக்கமான பொருட்களை, தொழில்நுட்பம் மூலம் அல்லது அணு/மீநுண் அளவில் தேவைக்கேற்பமாற்றி நீடித்த பயன்கொண்ட பொருட்களை உருவாக்குவதாகும் இக்குழு, கணக்கீட்டு மற்றும் சோதனை ஆய்வுகள், படிப்படியாகத் தோற்றுவித்த பொருட்கள் மற்றும் அவற்றின் கட்டுமான மட்டத்திலான செயல்திறனை அறியும் வகையில் அதிநவீன வசதிகள் மற்றும் வல்லமை பெற்றுள்ளது.

சிறப்பு மற்றும் பல்செயல்திறன் கட்டமைப்புகள் ஆய்வகம்

Head, Special & Multifunctional Structures Laboratory

முனைவர் சப்தர்ஷி சஸ்மால்

முனைவர் சப்தர்ஷி சஸ்மால்

மூத்த முதன்மை விஞ்ஞானி

  • Tel: 22549210
  • Email: saptarshi(at)serc(dot)res(dot)in