வளிப் பொறியியல் ஆய்வகத்தில் நவீன எல்லையடுக்கு வளி சுரங்கப்பாதை வசதி உள்ளது. இது நம் நாட்டினலேயே மிகப்பெரிய வளி சுரங்கங்களில் ஒன்றாகும். பல்வேறு கட்டமைப்புகளின் சிறு மாதிரிகள்களைக் கொண்டு முறையான வளி சுரங்கப்பாதை ஆய்வுகள் மூலம் விஞ்ஞானிகள் பல ஆண்டுகளாக தட்டை முகப்புடைய வடிவின் வளியிக்கவியல் துறையில் நிபுணத்துவத்தை உருவாக்கியுள்ளனர். மேலும், இயல்பான / தீவிர வளி மற்றும் காற்றினால் தூண்டப்பட்ட கட்டமைப்பின் வினையை வகைப்படுத்த கட்டமைப்புகள் மற்றும் கோபுரங்களில் சட்டகவகை கள சோதனைகளை நடத்துவதில் நிபுணத்துவத்தை நிறுவியுள்ளனர். கணக்கீட்டு திரவ இயக்கவியல் மற்றும் எல்லையடுக்கு வளி சுரங்க சோதனை களை இணை கருவிகளாகக் கருதி ஆய்வுகளை உலகெங்கிலும் உள்ள தற்போதைய போக்குக்கு ஏற்ப தொடர்கிறது. சூறாவளி பேரழிவு தணிப்பு என்பது ஆய்வகத்தின் முக்கிய ஆராய்ச்சி புலத்தில் ஒன்றாகும்.
மேலும், இந்த ஆய்வகம் இந்திய தரக்கட்டுப்பாடு நடைமுறைகளை மாற்றியமைக்க பங்களித்து ள்ளது (ஐ.எஸ்: 875 (பகுதி 3), ஐ.எஸ்: 4998, ஐ.எஸ்: 15498 மற்றும் ஐ.எஸ்: 15499). பல்வேறு ஆராய்ச்சி திட்டங்கள் (ஆலோசனை / நிதியுதவி / மானிய உதவி) மூலம் இந்த ஆய்வகம் தொடர்ந்து தொழில்துறைக்கு உயர்தர தொழில்நுட்ப சேவையை வழங்கி வருகிறது.