அறிவியல் மற்றும் தொழில்சார் ஆராய்ச்சி பேரவை (அ. தொ. ஆ. பே.), பல்வேறு அறிவியல் மற்றும் தொழில் சார்ந்த துறைகளில், அதி நவீன ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அறிவுத் தளத்தில் பணியாற்றும் தற்கால நிறுவனம் ஆகும் . இந்திய அரசாங்கத்தால் வழி நடத்தப்படும் ஒரு புகழ் பெற்ற ஆராய்ச்சி நிறுவனம். இது. ஆற்றல் மிகுந்த 38 தேசிய ஆய்வகங்கள், 39 சிறப்பு வாய்ப்பு மையங்கள், 3 புத்தாக்க வளாகங்கள் மற்றும் 5 பிரிவுகள் உள்ள கூட்டமைவுடன் இந்திய அளவிவில் பரந்துள்ளது. இப்பேரவையில் வல்லமை மற்றும் அனுபவம் வாய்ந்த சுமார் 4600 விஞ்ஞானிகள் சுமார் 8000 தொழில்நுட்ப பணியாளர்கள் ஆதரவுடன் பணிபுரிகின்றனர்.
அ. தொ. ஆ. பே, அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பிரிவுகளில் – குறிப்பாக,. வானொலி மற்றும் விண்வெளி இயற்பியல், கடல்சார்வியல், புவி இயற்பியல், இரசாயனங்கள், மருந்துகள், மரபியல், உயிரி மற்றும் நானோ தொழில்நுட்பம், சுரங்கவியல், வான்வெளிப் பொறியியல், கருவியியல், சுற்றுச்சுழல் பொறியியல் மற்றும் தகவல் தொழில்நுட்பம் உள்ளடக்கிய துறைகளில் பரந்து விரிந்துள்ளது. இந்நிறுவனம் சமூக நலன் சார்ந்த துறைகளான சுற்றுச்சுழல், சுகாதாரம், குடிநீர், உணவு, வீட்டுவசதி, எரிசக்தி, பண்ணை மற்றும் பண்ணைசாரா துறைகளில் குறிப்பிடத்தக்க தொழில்நுட்ப பங்களிப்பை வழங்கிக்கொண்டிருக்கிறது. மேலும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த மனிதவள மேம்பாட்டில் இப்பேரவையின் பங்கு குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் அறிவுசார் சொத்து இயக்கத்தின் முன்னோடியான அ. தொ. ஆ. பே, இன்று தேர்ந்தெடுக்கப்பட்ட தொழில்நுட்ப களங்களில் நாட்டிற்கான உலகளாவிய முக்கியத்துவத்தை உருவாக்க அதன் காப்புரிமை இலாகாவை வலுப்படுத்துகிறது. இந்திய பொது நிதியளிக்கப்பட்ட அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் அமைப்புக்கு வழங்கப்பட்ட அமெரிக்க காப்புரிமைகளில் 90 சதவீதம் அ. தொ. ஆ. பேரவைக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு சராசரியாக 200 இந்திய காப்புரிமைகள் மற்றும் 250 வெளிநாட்டு காப்புரிமைகளை இப்பேரவையின் தாக்கல் செய்கிறது. இப்பேரவையின் காப்புரிமைகளில் சுமார் 13.86 சதவீதம் உரிமம் பெற்றவை - இது உலகளாவிய சராசரியயை விட அதிகம். உலகில் பொது நிதியளிக்கப்பட்ட ஆராய்ச்சி நிறுவன சகாக்களின் மத்தியில் அ.தொ.ஆ.பே உலகளவில் காப்புரிமையை தாக்கல் செய்வதிலும் பாதுகாப்பதிலும் தலைமை வகிக்கிறது.
அ.தொ.ஆ.பே, அதிநவீன அறிவியல் மற்றும் மேம்பட்ட முன்னோடி அறிவுத்திறன்களை தொடர்கிறது. இப்பேரவையின் விஞ்ஞான பணியாளர்கள் இந்தியாவின் விஞ்ஞானம் சார்ந்த மனிதவளத்தில் சுமார் 3-லிருந்து 4 சதவீதம் மட்டுமே உள்ளனர், ஆனால் அவர்களின் பங்களிப்பு இந்தியாவின் அறிவியல் பயன்பாட்டில் 10 சதவீதமாகும். அ.தொ.ஆ.பே, 2012 ஆம் ஆண்டில் அறிவியல் மேற்கோள் அட்டவணை இதழ்களில் 5007 கட்டுரைகளை, ஒரு ஆவணத்திற்கு சராசரி 2.673 என்ற தாக்க காரணியுடன் வெளியிட்டது. இதன் வெளியீடு 2013 ஆம் ஆண்டில் 5086 கட்டுரைகளுடன், சராசரி தாக்க காரணி ஒரு ஆவணத்திற்கு 2.868-ஆகவும் இருந்தது.
அ.தொ.ஆ.பே, தொழில்முனைவோரை உயர்த்த தேவையான வழிமுறைகளை செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. இதன் மூலம் தீவிரமான மற்றும் புத்தாக்கம் மற்றும் வணிகமயமாக்கலுக்கு வழிவகுக்குத்து புதிய பொருளாதார துறைகளின் வளர்ச்சியை உறுதிப்படுத்துகிறது.
அ.தொ.ஆ.பே, தனக்கு புதிய பாதையை வகுத்துள்ளது. அது அ.தொ.ஆ.பே@ 80: தொலைநோக்கு & உத்தி 2022 - புதிய இந்தியாவுக்கான புதிய அ.தொ.ஆ.பே. இப்பேரவையின் நோக்கம் “ஒரு புதிய இந்தியாவுக்கு ஒரு புதிய அ.தொ.ஆ.பே உருவாக்குவது” மற்றும் பேரவையின்தொலைநோக்கு பார்வை “உலகளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் அறிவியலைத் தொடர்வது, புதுமைகளால் இயங்கும் தொழிற்துறையை செயல்படுத்தக்கூடிய தொழில்நுட்பத்தை உருவாக்குவது மற்றும் ஒருங்கிணைந்த பல்புலஒருங்கமைவுத் தலைமையை வளர்ப்பது. இதன் மூலம் இந்திய மக்களுக்கான உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.
சிமகோ நிறுவனத்தின் தரவரிசை உலக அறிக்கை 2014-இன் படி, உலகெங்கிலும் உள்ள 4851 நிறுவனங்களில் அ.தொ.ஆ.பே 84 வது இடத்தையும் மற்றும் உலகளாவிய முதல் 100 நிறுவனங்களில் இடம்பெற்றிருக்கும் ஒரே இந்திய நிறுவனம் என்ற பெருமை பெற்றது. அ.தொ.ஆ.பே ஆசியா அளவில் 17வது இடத்தைப் பிடித்து நாட்டை முதல் இடத்திற்கு செலுத்துகிறது.
இணையதளம் - CSIR, India