எம்மைப் பற்றி
மீள்தொடர் சுமையேற்றத்திற்கு உள்ளாகும் கட்டமைப்புகள் மற்றும் கட்டமைப்புசார் கூறுகளில், பொறியியற் வடிவாக்கங்களை செல்லுபடியாக்குவதற்கு தேவையான, கச்சாப் பொருள் வகைப்படுத்தல் கட்டமைப்புசார் கூறுகள் மற்றும் தகுதியான சோதனை வகைமாதிரிகள் மீதான அயர்வு மற்றும் தகர்வு ஆய்வு மிகவும் முக்கியமானதாகும்.பகுப்பியல் கருவிகள் மற்றும் கணிணித்துவ வசதிகள் இருப்பினும், இத்தகைய சிக்கலான சவால்களுக்கு தீர்வுகாண அயர்வு மற்றும் தகர்வு சோதனை மட்டுமே நம்பகத்தன்மை வாய்ந்த கருவியாக அமைகிறது.
இந்த நடுவத்தின் அயர்வு & தகர்வு ஆய்வகம், அயர்வு மற்றும் தகர்வு குறித்து அறிந்துக்கொள்ளத் தேவையான மிகச்சிறந்த, இற்றை-நிலை-நுட்ப வசதிகளைக் கொண்டுள்ளது.இந்த சோதனைக்கூடத்தின் வசதிகளில், 36.36 மீ × 10.5 மீ பரப்பளவிலான கனரக சோதனை தளத்துடன் 10.5 மீ அகலம், 7 மீ உயரம் கொண்ட, இரண்டு செங்குத்து வினைத்தாங்குச் சுவர்களும் அடங்கும்.இந்த ஆய்வகத்தில் பின்னூட்ட இயக்க-கட்டுப்பாடு கொண்ட அயர்வு சோதனை அமைப்புகளோடு, ±50 கி. நி. (2 எண்.), ±100 கி. நி. (2 எண்.), ±500 கி. நி. (2 எண்.), ±1000 கி. நி. (2 எண்.) மற்றும் ±2000 கி. நி. (2 எண்.) திறன்கொண்ட உந்திகள் உள்ளன.மேலும், இந்த ஆய்வகத்தில், ±250 கி. நி. and ±500 கி. நி (2 எண்.) திறன்கொண்ட அயர்வு மதிப்பிடப்பட்ட பொதுச்சோதனை எந்திரங்கள் உள்ளன.இவ்வகை அயர்வு சோதனை அமைப்புகள் அனைத்தும் 210 மெகா நீர்ம அழுத்தம் தரத்தக்க 510 நி.லி. மொத்தத் திறன் கொண்ட மூன்று நீரியல் திறன்வழங்கு மூலங்கள் உள்ளன.மீயொலி மற்றும் இயல்திற வேறுபாட்டு நுட்பங்களைக் கொண்டு பழுது அறிய மற்றும் அளக்கத் தேவையான வசதிகள் மற்றும் வல்லமை இந்த ஆய்வகத்தில் உள்ளது.மேலும், காணொளி நுண்ணோக்கி, பல்-அலைவரிசை, மற்றும் அதிவேக பல்தரவு பதிவு மின்கருவிகள் மற்றும் நிகழ்நிலை தோற்றுரு பதிவுத்திறன் வசதிகள் இந்த ஆய்வகத்தில் உள்ளன.
இந்த ஆய்வகமானது 1989தில் இருந்து அதன்வசமுள்ள வசதிகளையும் வல்லமையையும் திறம்பட பயன்படுத்தி உள்-அக மற்றும் நிதியுதவி பெற்று ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருவதோடு பல்வேறு நிறுவனங்கள் மற்றும் போர்த்திறஞ்சார் மற்றும் ஆற்றல்சார் துறைபிரிவுகள், தானி பயன்பாடுகள், தொடர்வண்டித்துறை, விண்வெளி பயன்பாடுகள், கட்டுமான தொழில்துறை முதலியவற்றிற்கு சேவைகளை வழங்கிவருகிறது.இந்த ஆராய்ச்சிக்கூடத்தில், கரைஅண்மைய உறை மேடைகளுக்கான எஃகு குழாயுரு பிணைப்புகள், மின்கரை அண்மைப்பரப்பின் உற்பத்தி ஆலைகளிலுள்ள கரிம-, எஃகு- மற்றும் துருவேறா எஃகு குழாயமைப்பு அங்கங்கள், தானி பாகங்கள் (இணைப்புத் தண்டு, காற்றக சுருள்வில், காற்றக மிதவை அமைப்புகள், பிறழ்ச்சி பாதுகாப்பு கட்டகங்கள், சிறப்பு பயன்பாடுகளுக்கான நில அகழ்விகளின் சக்கரங்கள், தொழில்சாலை மற்றும் தானிக்கான சங்கிலிகள், நிலைப்பி கால்கள், குவியம் தாங்குசட்டங்கள், துணை-கூடமைப்புகள், தேய்ம பூண்கள், இணை தொடுப்பு தாங்குசட்டங்கள் முதலியன), தேய்ம உருளிப்பட்டை அச்சு, அதிர்வு கடத்தி அலகுகள், இந்திய தொடர்வண்டி துறையில் பயன்படுத்தப்படும் அலுமினிய அனல்முறை மற்றும் விரைவு முட்டுப் பற்றவைக்கப்பட்ட தண்டவாளங்கள், வலிவூட்டக் கம்பிகள் (வெப்பவிசையியல் பக்குவப்படுத்தப்பட்ட கம்பிகள், அரிப்புதாங்கு எஃகு, வலிவூட்டகம்பி பிணைப்பி முதலியன), முன்-தகைவேற்ற முறுக்கிழைகள், உள்நாட்டு அச்சுருளை கச்சாப் பொருட்கள் மீதான வாழ்நாள் மற்றும் இதர பல அங்கங்கள் மற்றும் பொருட்கள் மீது அயர்வு மற்றும் தகர்வு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.