கட்டமைப்பு நலன் கண்காணிப்பு ஆய்வகம்

எங்களைப்பற்றி

அறிவியல் மற்றும் தொழில்சார் ஆராய்ச்சி பேரவை - கட்டமைப்பு பொறியியல் ஆராய்ச்சி நடுவத்தின் (அ.தொ.ஆ.பே-க.பொ.ஆ.ந) கட்டமைப்பு நலன் கண்காணிப்பு ஆய்வகத்திற்கு (க.ந.க.ஆ) உங்களை வரவேற்கிறோம். கட்டமைப்புகள் மற்றும் கட்டமைப்பு கூறுகளின் வடிவமைப்பு மற்றும் செயல்திறன் மதிப்பீட்டில், குறிப்பாக, கட்டமைப்பின் காப்புநிலை மற்றும் கூறுபடாநிலை உய்ய பயன்பாட்டுகளில் கட்டமைப்பு நலன் முக்கிய பங்கு வகிக்கிறது. பொது கட்டுமானங்களின் கட்டமைப்புப் பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மையை அதிகரிப்பதற்கான புத்தமை வழிமுறைகளையும் உத்திகளையும் உருவாக்குவதரற்காக இவ்வாய்வகம் செயல்படுகிறது. எமது ஆராய்ச்சியானது கட்டமைப்பு நலன் கண்காணிப்பு, உள்கட்டமைப்புகளின் செயல்திறனை மதிப்பீடு செய்தல், எரிவாயு குழாய்த்தொடர்களின் கண்காணிப்புக்கான வழிமுறைகளை உருவாக்குதல் மற்றும் அதிர்வு அடிப்படையில் கட்டமைப்புகளை மதிப்பீடுசெய்தல் போன்றவற்றில் ஒருமுகப்பட்டுள்ளது. தொழில்துறையில் ஏற்படும் சிக்கல்களை தீர்ப்பதற்கான நுட்பங்களையும், வல்லமையும் பயன்படுத்துவது எங்கள் ஆய்வகத்தின் முக்கிய நடவடிக்கைகளில் ஒன்றாகும். எங்கள் ஆய்வகம், அரசு, பொது மற்றும் தனியார் துறைகளைச் சேர்ந்த பல நிறுவனங்களுக்கு எண்ணற்ற ஆலோசனை/ நிதிஆதரவு ஆராய்ச்சி திட்டங்களை மேற்கொண்டுள்ளது. இந்தியாவில் பொது கட்டுமானங்களின் கட்டமைப்பு, நலன் மற்றும் கண்காணிப்புக்கு குவியமாக விளங்க எங்கள் ஆய்வகம் தொடர்ந்து பாடுபடுகிறது.

கட்டமைப்பு நலன் கண்காணிப்பு ஆய்வகம் (க. ந.க.ஆ)

Head, Structural Health Monitoring Laboratory

முனைவர் ஶ்ரீநிவாஸ் வி

முனைவர் ஶ்ரீநிவாஸ் வி

மூத்த முதன்மை விஞ்ஞானி

  • Tel: 22549237
  • Email: srinivas(at)serc(dot)res(dot)in