CSIR-SERC logo

கோபுர சோதனை மற்றும் ஆராய்ச்சி நிலையம்

எங்களை பற்றி

கோபுரங்கள் மற்றும் கோபுரம் போன்ற கட்டமைப்புகள் மின்சக்தி கடத்தவும் மற்றும் தகவல்தொடர்புக்கு தூண்களாக விளங்குகின்றன. நீடித்த தொழில்துறை செயல்திறன் மற்றும் தேசிய பொருளாதாரத்தின் முக்கிய துறைகளின் நலன் மின்சார சக்தி மற்றும் தகவல்தொடர்பு இணைப்புகளின் பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மையை பெரிதும் சார்ந்துள்ளது. இதை கருத்தில் கொண்டு, 1965 ஆம் ஆண்டு முதல் அறிவியல் மற்றும் தொழில்துறைசார் ஆராய்ச்சிப் பேரவை – கட்டமைப்புப் பொறியியல் ஆராய்ச்சி நடுவம் (அ.தொ.ஆ. பே. – க.பொ.ஆ. ந.) மற்றும் 1984 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட அதன் உலகத் தரம் வாய்ந்த கோபுர சோதனை மற்றும் ஆராய்ச்சி நிலையம் (கோ.சோ.ஆ. நி) ஆகியவற்றின் பங்களிப்பு மிகவும் குறிப்பிடத்தக்கதாகும். அ.தொ.ஆ. பே. – க.பொ.ஆ. ந., சென்னை, கட்டமைப்புகள் மற்றும் கட்டமைப்பு கூறுகளின் பகுப்பாய்வு, வடிவமைப்பு மற்றும் சோதனைக்கு சிறந்த வசதிகள் மற்றும் உயரிய ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு நிபுணத்துவத்தை உருவாக்கியுள்ளது.
சென்னை விமான நிலையத்திற்கு எதிரே திரிசூலத்தில் அமைந்துள்ள குதிரை- குளம்பு வடிவிலான முந்தைய கற்சுரங்கத்தில் அமைந்துள்ள கோ.சோ.ஆ.நி வசதி, இன்று உலகின் மிகச்சிறந்த முன்னணி வசதிகளில் ஒன்றாகும்.

கோபுர சோதனை மற்றும் ஆராய்ச்சி நிலையம் (கோ.சோ.ஆ.நி)

Head, Tower Testing Research Station

முனைவர் பழனி கே சோ

முனைவர் பழனி கே சோ

தலைமை விஞ்ஞானி

  • Tel: 22545580
  • Email: pal(at)serc(dot)res(dot)in