எங்களைப்பற்றி
எஃகு கட்டமைப்பு கூறுகள் மற்றும் கட்டமைப்புகளின் பகுப்பாய்வு, வடிவமைப்பு மற்றும் சோதனையானது, உலகெங்கிலும் உள்ள ஆராய்ச்சியாளர்களுக்கு மிக சவாலான ஒன்றாகும். சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன்னர், பல்வேறு உருக்கி உருமாற்றப்பட்ட மற்றும் குளிர்நிலையில் உருமாற்றப்பட்ட எஃகு கட்டமைப்புகளின் கூறுகள் மற்றும் கட்டமைப்புகளின் செயல்பாடுகளை புரிந்துகொள்வதற்காக, அறிவியல் மற்றும் தொழில்சார் ஆராய்ச்சி பேரவை - கட்டமைப்பு பொறியியல் ஆராய்ச்சி நடுவத்தின் (அ.தொ.ஆ.பே-க.பொ.ஆ.ந) எஃகு கட்டமைப்புகள் ஆய்வகம் தொடங்கப்பட்டது. எஃகு கட்டமைப்பு பொறியியல் ஆராய்ச்சியின் மூலம் மிகச்சிறந்த வழிகாட்டு நடைமுறைகளை உருவாக்கி அதன் சிறப்பம்சங்களை இணைத்து பல்வேறு இந்திய தரநிலை வழிகாட்டுதல்களான இ.த 800 (2007) மற்றும் இ.த 801 - வரைவு நடைமுறை ஆகியவற்றின் உருவாக்கத்தில் முன்னோடியாக விளங்குகிறது.
எஃகு கட்டமைப்பு ஆராய்ச்சி விஞ்ஞானிகள், கணினி வழி ஒப்பாய்வுகளை செய்து சிறந்த எஃகு கட்டமைப்பு அறிவியலை உருவக்குவது மட்டுமில்லாமல், அதனை ஆய்வக சோதனைகள் செய்து உறுதி செய்கின்றனர். இவ்வாறு சோதனைகளை நடத்துவதற்காக மிகசிறந்த 250 கி.நி விசைக்தாங்கக்கூடிய சோதனைதளத்தை கொண்டுள்ளது. இவ்வாய்வகத்தில், ±125 மிமீ நகர்வுகொண்ட 50 கி.நி அயர்வு -மதிப்பிடப்பட்ட உந்திகள் உள்ளன, இந்த ஆய்வகத்தில், எஃகு-நுரை கலப்பு கற்காரை சட்டகங்கள் தொடர்பான ஆராய்ச்சிக்கான தரமான நுரை கற்காரை கலவை தானியங்கி இயந்திரம் உள்ளது. எஃகு கட்டிடங்கள் மற்றும் கட்டமைப்புகளின் நலனறிய சேதமுறா சோதனைகள் மற்றும் மதிப்பீடுகள் (சே.சோ & ம) மூலம் அறிவதற்கான உபகரணங்கள் / கருவிகள் முறையே, பூச்சு தடிமன் அளவி, கடினத்தன்மை சோதனையளவி, தடிமன் அளவி, சாய ஊடுருவல் சோதனை, மீயொலி உள்குறை அறிகருவி, காந்தத்துகள் சோதனை மற்றும் முப்பரிமாண விலகு முப்பரிமான நீளஅளவி ஆகியவை உள்ளன. எஃகு கட்டமைப்புகள் ஆய்வகத்தில் அரிப்பை தூண்டி உருவாக்க மற்றும் அளவீடுகளுக்காக, மின்வேதியியல் மாற்றி பணிநிலையத்துடன் (ஆட்டோலாப்) கூடிய மின் அழுத்த நிலைநிறுத்தி / மாறாமின்னோட்ட அளவுகருவி உள்ளது. எஃகு கட்டமைப்புகள் ஆய்வகத்தில் அகச்சிவப்பு நிழல்படக்கருவி மற்றும் நுண்ணுணர்வு வெப்பளவி கருவிகளை கொண்டு உயர்வெப்பநிலைகளை உருவாக்க மற்றும் அளவிட முடியும்.