அறிவியல் மற்றும் தொழில்சார் ஆராய்ச்சிப் பேரவை – கட்டமைப்புப் பொறியியல் ஆராய்ச்சி நடுவம் (அதொஆபே-கபொஆந) 1970களில் இருந்து சூறாவளி பேரிடர் தணிப்பில் பணியாற்றி வருகிறது. இந்த நடுவம் பூகம்பப் பேரிடர் தணிப்பிலும் தனது நிபுணத்துவத்தை வளர்த்துக் கொண்டுள்ளது. பெருவெடிப்பு-தாங்குதிற கட்டமைப்பு உருவாக்கலிலும் பங்காற்றிவருகிறது. இதற்கு சான்றாக, ஆசியாவிலேயே ஈடுயிணையற்ற சோதனைக்கூடங்களான, வளிசார் பொறியியல் ஆராய்ச்சிக்கூடம் (வபொஆ), பூகம்ப சோதனை மற்றும் ஆராய்ச்சிக்கான உயர்தரக்கூடம் (பூசோஆஉ) மற்றும் கோபுர சோதனை மற்றும் ஆராய்ச்சி நிலையம் (கோசோஆநி) விளங்குகின்றன. பூகம்ப சோதனை மற்றும் ஆராய்ச்சிக்கான உயர்தரக்கூடத்தில் தொழிற்சாலை மற்றும் போர்த்திறஞ்சார் துறைகளில் எழும் சவால்களுக்கான அறிய முன்னோடியான சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வளிசார் பொறியியல் ஆராய்ச்சிக்கூடமானது அதிவேக சூறாவளிகளால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுப்பதற்கான தகுதியான, சிறப்பு தங்குமிடங்களை வடிவமைப்பதில் செஞ்சிலுவை சங்கத்திற்கு உதவியுள்ளது. வெடிபொருட்களை பாதுகாப்பாக சேமிப்பதற்க்கு பாதுகாப்புத்துறை நிறுவல்களின் பெருவெடிப்பை தாங்குதிற கட்டமைப்பு வடிவாக்கங்களைக் கொண்டு, திறன் வலுப்படுத்தப்பட்டுள்ளது. இத்தகைய வடிவாக்கங்கள், தனித்துவமான, பெரிய அளவிலான கள சோதனைகளைக் கொண்டு சரிபார்க்கப்பட்டன. எனினும், இயற்கை- மற்றும் செயற்கை- இடர் கணிப்பீடு, கட்டமைப்புகளின் அதிர்வு-கட்டுப்பாடு மற்றும் இடர்மதிப்பீடு ஆகிய புலங்களில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான நிபுணத்துவத்தின் உடனடித் தேவையாக உள்ளது. இந்தப் புலம், சமூக அறிவியல், நடத்தைசார் அறிவியல், பௌதிக அறிவியல், இடர்பாடு முன்னுணர்தலுக்கான உயர்தர கண்காணிப்பு முறைகள் உள்ளிட்ட புலங்களிலிருந்து வரும் ஆராய்ச்சி முடிவுகளை ஒருங்கிணைக்க ஏராளமான வாய்ப்புகளை நல்குவதால், இதை உண்மையான புலங்கடந்ததாகக் கொள்ளலாம். பேரிடர் தணிப்பில் மற்றொரு சவாலான புலமானது, கட்டமைப்புகளின் சேத தணிப்பாற்று உதவிகரமான கட்டமைப்புத் திட்டமுறைகளை முன்னெடுப்பதாகும்.
மறைஇடர் குறைப்பிற்கான சென்டாய் வழிமுறை 2015-2030ல் குறிப்பிடப்பட்டுள்ளபடி, மறைஇடர் குறைப்பிற்கான பேரிடர் தாங்குதிற உட்கட்டமைப்பு உருவாக்கத்தில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும். கச்சாப் பொருட்கள் பற்றிய விரிவான விவரங்கள், அதிர்வு-கட்டுப்படுத்தலுக்கான திட்டமுறைகள், உணர்வி மேலாண்மை மற்றும் வரைவியல் பயனர் இடைமுக அடிப்படையில் வெளியேற்ற திட்டமுறைகளின் பல்வேறு சூழ்நிலைகளை ஒப்புருவாக்குதல் முதலியவற்றைக் குறித்தெல்லாம்கூட வெளிக்கொணர வேண்டியுள்ளது. பெயர்வு-ஆராய்ச்சியை முன்னெடுப்பதன் மூலம், இந்நடுவம் செயற்பாடு-அடிப்படையிலான வடிவாக்க கோவையை உருவாக்கி வருகிறது. மேலும்.
இடம் சார்ந்த பூகம்ப இடரை குறிப்பிடவும் (இந்திய நிகழ்தகவுசார் பூகம்ப இடர் பகுப்பாய்வு அடிப்படையில்) முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.