பேராசிரியர் ஜி. எஸ். இராமசாமி உள்ளிருப்புப் பயிற்சி

அ. தொ. ஆ. பே- க. பொ. ஆ. ந, பெயர்பெற்ற கல்வி நிறுவனங்களில் குறிப்பிட்ட பொறியியல் துறைகளின் திறமையான மாணவர்களுக்கு பயிற்சி வாய்ப்பை அளிக்கிறது. அ.தொ.ஆ.பே- க.பொ.ஆ.ந, நிறுவன இயக்குநர் பேராசிரியர் ஜி.எஸ்.ராமசாமியின் நினைவாக உள்ளிருப்புப் பயிற்சி திட்டம் அளிக்கப்படுகிறது. தற்போது, ஆண்டுக்கு அதிகபட்சமாக 10 மாணவர்களுக்கு வாய்ப்பளிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் மே-ஜூன் மாதங்களில் முழுநேர அடிப்படையில் தொடர்சியாக 6 முதல் 8 வாரங்கள் வரை உள்ளிருப்புப் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற்கான அறிவிப்பு ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதத்தில் எங்கள் இணையதளத்தில் வெளியிடப்படும். அதற்கான விண்ணப்பம் மற்றும் சான்றுகளை இணைய வழியே சமர்ப்பிக்கலாம்.